×

நிவாரண பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை உருவாக்கம்: அமைச்சர் உதயகுமார் தகவல்

சென்னை: பருவமழை  காலங்களில் பேரிடர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற் கொள்ள  தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் பேரிடர் காலங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு பேரிடர் உதவிப் படை என்ற சிறப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவிற்கு வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னு ஆகியோர் தலைமை தாங்கினார். புதிய படையை வருவாய் மற்றும்  பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது:இந்த உதவி படையானது சமூக அமைப்புகளின் தன்னார்வலர்ளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளின் தன்னார்வலர்கள் சம்பந்தபட்ட மாவட்ட ஆட்சி தலைவர்களின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ்  பணியாற்றுவார்கள். இந்த உதவி படையினர் புயல் வெள்ளம், தீ மற்றும் நிலச்சரிவு ஆகிய பேரிடர்களின் போது மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழகத்தில் 4399 பகுதிகளில் வெள்ளத்தால் பாதிப்புக்கு  உள்ளான பகுதிகளாக கண்டறியப்பட்டள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் 5 முதல் 10 வரையிலான எண்ணிக்கையில் 30,759 முதல் நிலை மீட்பாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இதில் 9162 பேர் பெண்கள் ஆவார். இதுவரை 662  பல்வேறு துறை அடங்கிய மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவிற்கு 5 முதல் 7 வரையிலான மிக அதிக மற்றும் அதிக பாதிப்புள்ள பகுதிகள் ஓதுக்கப்பட்டு கண்கானிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மிக அதிக வெள்ள பாதிப்பிற்கு உள்ளாகும் சென்னை மாவட்டத்தில் ஆப்டர் மித்ரா திட்டத்தின் கீழ் 200 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு பேரிடர் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளளது. இவ்வாறு அவர் கூறினார்.இதில் சத்திய சாய்  சேவா அமைப்பின் சார்பில் சந்திர சேகர்,ரமணி, செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் ஹரீஸ் மேத்தா, இணை இயக்குனர் பழனி குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Uthayakumar , Tamil Nadu ,Development, Minister Uthayakumar informed
× RELATED கொரோனாவின் கடைசி வைரஸை அழிக்கும் வரை...